யாழ்.ஊர்காவற்றுறையில் தோல்வியில் முடிந்த தேடுதல்!

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை தோல்வியில் நிறைடைந்துள்ளது.

கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள், இராணுவம் மற்றும் ஈ.பி.டி.பி. போன்றவற்றினால் காலத்துக்கு காலம் பயன்படுத்தப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தினுள் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்த தகவலினையடுத்து நீதிமன்ற அனுமதியைப் பெற்ற பொலிஸார் இன்று கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி நிலத்தை தோண்டி தேடுதல் நடத்தினார்கள்.

எனினும் சந்தேகத்திற்கு இடமான எவ்வித பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post