யாழில் தாயையும் பிள்ளையையும் பந்தாடிய வங்கி முகாமையாளரின் கார்! (படங்கள்)

யாழ். கச்சேரி-நல்லூர் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தாயும் மகளும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்துள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். கிட்டு பூங்கா சந்தியில் இருந்து கச்சேரி நோக்கி பயணித்த கார் ஒன்று கச்சேரி-நல்லூர் வீதியும் நாவலர் வீதியும் சந்திக்கும் சந்தியில் கடக்க முற்பட்ட இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ்விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தில் பயணித்த தாயும் பிள்ளையும் தூக்கி வீசப்பட்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளிய குறித்த கார் வீதி அருகில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி நின்றுள்ளது.

இதையடுத்து விபத்தில் சிக்கி காயமடைந்த தாயையும் பிள்ளையையும் மீட்டு யாழ் போதனா வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தை ஏற்படுத்திய கார் வங்கி முகாமையாளர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.

Previous Post Next Post