சிறீதரன் வழங்கிய வாக்குமூலம்! யாழ்.தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு!!

75 வாக்குகளை ஒரே நாளில் கள்ளமாக வாக்களித்தேன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான சட்டத்தரணி ஸ்ரானிஸ்ஸாஸ் செலஸ்ரின் என்பவராலே இந்த முறைப்பாடு இன்று புதன்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தாம் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 75 வாக்குகளை ஒரே நாளில் வாக்களித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறியிருந்தார்.

அதுதொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டு செய்யப்பட்டதற்கான அத்தாட்சியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சட்டத்தரணி ஸ்ரானிஸ்ஸாஸ் செலஸ்ரின் முறைப்பாடு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.
Previous Post Next Post