யாழ்.வடமராட்சியில் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட குடிசை வீடு!

வடமராட்சி அல்வாய் பகுதியில் குடிசை வீடொன்று தீயில் முற்றாக எரிந்து அழிவடைந்துள்ள நிலையில் விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த தெரிய வருவதாவது,

வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலட்டி, அல்வாய் கிழக்கு அல்வாயில் உள்ள குடிசை வீடொன்று இன்று மாலை 6.30 மணியளவில் தீயில் எரிந்து முற்றாக அழிவடைந்துள்ளது.

மூன்று அங்கத்தவர்களை கொண்ட வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பம் வசித்து வந்த வீடே இவ்வாறு தீயில் எரிந்து முற்றாக அழிவடைந்துள்ளது.

இன்று மாலை வேளையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏற்பட்ட தீ பரவலில் வீடு முற்றாக அழிவடைந்துள்ளதுடன் வீட்டில் இருந்த உடமைகளும் தீயில் எரிந்து அழிவடைந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர்களால் நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமது வீட்டிற்கு திட்டமிட்டே விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post