பூநகரி-சங்குப்பிட்டிப் பாலத்திற்கு அருகில் விபத்து! (படங்கள்)

டிப்பர் வாகனங்களினால் விபத்து ஏற்படும் மரண வலயமாக மாறிவரும் சங்குப்பிட்டி வீதியில் இன்றும் விபத்து இடம்பெற்றது. டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியை பந்தாடியதில், முச்சக்கர வண்டியில் சென்ற மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சங்குப்பிட்டி பால இறக்கத்தில் சற்று முன்னர் இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25), கிளிநொச்சி உதயநகரை சேர்ந்த ப.தர்சிகன் (24), ஆனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.செல்வகுமார் (24) ஆகியோரே காயமடைந்துள்ளனர். இதில் பிரியதர்சன் கடுமையான காயங்களிற்குள்ளானார்.

Previous Post Next Post