வெற்றி பெற்றார் சுமந்திரன்! தெரிவான எம்.பிக்களின் விருப்பு வாக்கு விபரம் இணைப்பு!!



9ஆவது நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடந்த தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களைக் கைப்பற்றியது. 2015ஆம் ஆண்டு 5 ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்பு இம்முறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு இன்று அதிகாலை 3 மணியளவில் தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசனால் வெளியிடப்பட்டது.

அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது 10 ஆண்டுகள் போராட்டத்தில் முதலாவது நாடாளுமன்ற ஆசனைத்தை இம்முறை வென்றுள்ளது. தமிழ் மக்கள் தேசிய ய கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன தலா ஒரு ஆசனைத்தைப் பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் த.சித்தாா்த்தன் ஆகியோர் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றனர்.

அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விருப்புவாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அங்கஜன் இராமநாதனும் ஈபிடிபி சார்பில் டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள்:
  1. அங்கஜன் – 36,300
  2. சிறிதரன் – 35,884
  3. டக்களஸ் -32,156
  4. கஜேந்திரகுமார் – 31,658
  5. சுமந்திரன் – 27,734
  6. சித்தார்த்தன் – 23,740
  7. விக்னேஸ்வரன்- 21,554
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிய வேட்பாளா்களின் விருப்பு வாக்குகள் :
  1. சசிகலா- 23,098
  2. மாவை சேனாதிராசா- 20,292
  3. ஈ.சரவணபவன்- 20,358
  4. பா.கஜதீபன்- 19,058
  5. இ.ஆனல்ட்- 15,386
  6. கு.சுரேந்திரன்- 10,917
  7. வே.தவேந்திரன்- 5,952 
கட்சிகள் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் :
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 03
  • தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 01
  • தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 01
  • சிறிலங்கா சுதந்திரக் கட்சி – 01
  • ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 01
Previous Post Next Post