பிரான்ஸில் அதியுச்சம் பெற்ற கொரோனா! கடந்த மே மாதத்திற்குப் பின் அதிகளவான தொற்று!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்ஸில் நேற்று புதன்கிழமை 3,776 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். கடந்த மே மாதத்துக்குப் பின்னர் ஒரு நாளில் பதிவான மிக அதிகளவு தொற்று நோயாளா் தொகை இதுவாகும்.

பிரான்ஸில் அண்மைய வாரங்களாக தொற்று நோயாளா்களின் தொகை மீண்டும் அதிகரித்துவருகின்றபோதும், மற்றொரும் சமூக முடக்கலை அறிவிக்க ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மறுத்துள்ளார்.

நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 3,776 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுநோயாளா்களுடன் பிரான்ஸ் இதுவரை பதிவான தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை 225,043 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று நோயின் மற்றொரு அலைக்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன. அனைத்து வயதினரும் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இளைஞர்கள்அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என பிரெஞ்சு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான தொற்று நோயாளா்கள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் மற்றொரு பெரியநகரான மார்சேயில் பதிவாகியுள்ளனர்.

செவ்வாயன்று பாரிஸில் இடம்பெற்ற கால்பந்து சம்பியன் லீக் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் பாரிஸ் பி.எஸ்.ஜி. அணி (ParisSaint-Germain Football Club) அணி 3-0 எனும் கணக்கில் அபார வெற்றிபெற்றது. இதனால் இறுதிப்போட்டிக்கு பி.எஸ்.ஜி.அணி தெரிவாகியுள்ளது.

இந்நிலையில் மைதானத்தில் கூடிய ரசிகர்கள் கோவிட்-19 தொற்று நோயை மறந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.பலர் முக கவசங்களைக் கூட அணியாமல் காணப்பட்டமை பாரிய தாக்கங்களை செலுத்தும் என சுகாதார வல்லுநா்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தக் கால்ப்பந்தாட்ட இறுதிக் போட்டி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.போட்டியைக் காண 5,000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகளவானவா்கள் மைதானத்தில் கூடுவது தொடா்பிலும் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் மிகக்கடுமையான கோவிட்-19 கட்டுப்பாடுகளை பிரான்ஸ் விதித்தது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பு அங்கு வெகுவாகக் குறைத்தது. ஆனால் கடந்த சில வாரங்களில் புதிய கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தொற்று நோய் மீண்டும் கட்டுப்பாட்டை மீற அதிகரிக்கக்கூடும் என பொது சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் 16,700 க்கும்மேற்பட்ட நோய்த்தொற்று நோயாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இருப்பினும், பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. தற்போது 374பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post