யாழில் 18 வயது யுவதி கைது!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுடன் யாழ். கொழும்புத்துறையில் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கெலன்தோட்டம் கொழும்புத்துறையில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் 18 வயதுடைய இளம் யுவதி ஒருவரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று (செப்-21) நண்பகல் 2.00 மணியளவில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது கொழும்புத்துறை பகுதியில் அதே இடத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுவரி உதவி ஆணையாளர் வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான சக மதுவரிபரிசோதகர் V.ரசிகரன் மற்றும் EG 1026 V.அனுஷன் FEG 67 T. வாசுகி ஆகியோர் nகொண்ட குழுவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 185 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் குறித்த யுவதியிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றத்தில் முற்படுத்த மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post