யாழ்.கட்டப்பிராயில் விபத்து! இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு! (படங்கள்)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ். கட்டப்பிராய் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த ஒரு பிள்ளையின் தாயார் சிகிச்சை பலனளிக்காது சற்று முன்னதாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பருதித்துறை வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

கட்டைப்பிராய் பகுதி ஊடாக பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்டபோது பிரதான வீதியில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளவர் கல்வியங்காடு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுபேசன் பவானி (வயது 33) என்று தெரிய வந்துள்ளது.
Previous Post Next Post