இல் து பிரான்சுக்குள் விதிக்கப்பட்டது புதிய கட்டுப்பாடு! மக்களே அவதானம்!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் பத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

உலக சுகாதா நிறுவனத்தின் (WHO ) அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். லியோன், நீஸ் உட்பட பல நகரங்களை ஆபத்து அதிகம் கொண்ட நகரங்களாக அறிவித்துள்ள WHO, தற்போது இல் து பிரான்சையும் மிக ஆபத்தான தொற்று வலையமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

அதன்படி, பிறந்தநாள் விழாக்கள், குடும்ப உணவு ஒன்றுகூடல், நண்பர்களுடனான சந்திப்பு அல்லது தனியார் ஒன்று கூடல் என அனைத்து நிகழ்வுகளிலும் பத்துக்கும் மேற்பட்டோர் கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை WHO நிறுவனம், இல் து பிரான்சுக்கான பிராந்திய சுகாதார நிறுவனத்துடன் (l'Agence régionale de santé d'Île-de-France) இணைந்து வெளியிட்டுள்ளது.
Previous Post Next Post