பிரான்ஸில் கொரோனா! ஒரே நாளில் பதிவான அதியுச்ச உயிரிழப்புக்கள்!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக அதிகபட்சமானோர் சாவடைந்துள்ளனர்.  உள்ளிருப்பில் இருந்து வெளியேறியதன் பின்னர் பிரான்சில் நேற்று (செப் 18) 13,215 பேருக்கு ஒரே நாளில் தொற்று ஏற்பட்டுள்ளது. நிலமை பிரான்சில் தொடர்ந்தும் மோசமாகி வருவதாக தகவலை வெளியிட்டுள்ள Santé Publique France (பொது சுகாதார நிறுவனம்) அறிவித்துள்ளது.

அதேவேளை, பிரான்சில் உள்ளிருப்பு நிறைவின் பின்னர் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 123 பேர் சாவடைந்துள்ளனர். ஒரே நாளில் சாவு எண்ணிக்கை நூறு எனும் எல்லையை கடப்பது மே மாதத்தின் பின்னர் இதுவே முதன்முறை.

மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை 31,249 பேர் சாவடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 93 தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தவிர புதிதாக 850 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், அவர்களில் 100 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post