நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதல் நடத்தியவருடன் இணக்கமாகச் செல்லுமாறு கோப்பாய் பொலிஸார் பிரதேச சபைச் செயலாளருக்கு அழுத்தம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.

நல்லூர் அரசடியைச் சேர்ந்த ஒருவர், திருநெல்வேலி சந்தை தொகுதியில் உள்ள கடை உறவினரின் கடை தொடர்பில் பிரதேச சபைச் செயலாளரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகத் தெரிவித்து முரண்பட்டுள்ளார்.

அதனால் பிரதேச சபைச் செயலாளரை அந்த நபர் தாக்கியுள்ளார். தாக்கிவிட்டுத் தப்பிச் செல்ல முற்பட்ட போதும், அவரை தடுத்துவைத்த பிரதேச சபை ஊழியர்கள் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தாக்குதல் நடத்தியவருடன் சமாதானமாகச் செல்லுமாறு பிரதேச சபைச் செயலாளருக்கு பொலிஸார் அழுத்தம் வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post