பிரான்ஸில் தமிழ் மக்களின் செயற்பாடுகளால் கொரோனா பரவும் அபாயம்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
உலக நாடுகளைப் புரட்டிப் போட்ட கொரோனா பேரிடர், பிரான்ஸை அதிகம் தாக்கியிருந்தது. அதில் தமிழ் மக்களும் பாரியளவில் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புக்களைச் சந்தித்திருந்தனர்.

தற்போது பிரான்ஸில் மீண்டும் கொரோனாவின் கோரத் தாண்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரச தரப்பால் மக்களுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றது.

அதாவது, கிருமி நீக்கிகள் பயன்படுத்துதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியினைப் பேணுதல், முகக் கவசம் அணிதல் என்பன பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நோய் அறிகுறி இருந்தால் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், உடல் நிலை மோசமான வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குடும்ப நிகழ்வுகளில்தான் அதிகளவில் கொரோனாத் தொற்று ஏற்படுகிறது என அரசு அடிக்கடி எச்சரித்து வருகின்றது.

ஆனால் இங்கு வாழும் தமிழ் மக்கள் எதனையும் பொருட்படுத்தாது, குடும்ப நிகழ்வுகளை நடாத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் குடும்பக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட சிலர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையிலும் தமிழ் மக்கள் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதை நிறுத்திக் கொள்ளவில்லை என பலதரப்பட்டவர்களாலும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

இதேவேளை கொரோனா பேரிடரின் உச்சக் காலமாகிய மார்ச் மாதம் நடுப் பகுதி போன்றதொரு நிலைமை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் வரும் என தொற்று நோய் வைத்திய நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் தொற்றுநோய் வைத்திய நிபுணர் ஹர்த்திரிங் கில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் பிரான்ஸ் அரசால் இக் கொரோனாத் தொற்றைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதாது என்றும் மேலதிக நடவடிக்கைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும். இல்லையொனில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காது அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post