யாழில் இளைஞன் மீது காரில் வந்த கும்பல் வாள்வெட்டு! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மானிப்பாயைச் சேர்ந்த தனு ரொக் என்ற இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலுக்கு முன்பாக மணிக்கூட்டு வீதியில் இன்று நண்பகல் இந்த வாள்வெட்டு வன்முறை இடம்பெற்றுள்ளது.

காரில் வந்த வன்முறைக் கும்பல் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை வளால் வெட்டிவிட்டு அந்த இடத்திலிலிருந்து தப்பித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous Post Next Post