அமெரிக்க ஜனாதிபதிக்குக் கொரோனா! அதிர்ச்சியில் இந்தியர் உயிரிழப்பு!! (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து அவரை ஒரு மீட்பராகப் போற்றி சிலை அமைத்து வழிபட்டுவந்த இந்தியா் ஒருவர் அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். .

தெகுங்காலாவைச் சோ்ந்த 30 வயதான புஸ்ஸ கிருஷ்ணா என்ற இந்த விசுவாசி டரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்ததாக அவரது கிராம மக்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்ப் தனது கனவில் தோன்றியதில் இருந்து அவா் மீது பக்தி ஏற்பட்டதாகக் கூறிய கிருஷ்ணா, சில நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறித்து கண்ணீருடன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் மனச்சோர்வடைந்துள்ளதாக கிருஷ்ணா தன்னிடம் தெரிவித்தாக தெலுங்கானவில் கிருஷ்ணா வசித்துவந்த கொன்னி கிராமத்தின் தலைவரும் அவரது நெருங்கிய நண்பருமான வெங்கட் கவுட் தெரிவித்துள்ளார்.

தீவிரமாக நேசித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை நேரில் பார்க்காமல் கிருஷ்ணா உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என வெங்கட் கவுட் கூறியுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான ட்ரம்ப் தான் முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவித்துள்ளார். நவம்பர் 3 -ஆம் திகதி நடைபெறவுள்ள தோ்தல் பிரச்சாரத்தை மீண்டும் விரைவில் தொடங்கவுள்ளதாக அவா் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post