யாழில் தபாலக ஊழியருக்குக் கொரோனா அறிகுறி! தனிமைப்படுத்திச் சிகிச்சை!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு உப தபாலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தொண்டை நோ உட்பட்ட கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட அவர் இன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

சாவகச்சேரியில் வசிக்கும் அந்த நபர் கடந்த முதலாம் திகதி பண்டத்தரிப்பு உப தபாலகத்துக்கு மாற்றலாகியுள்ளார்.

இதேவேளை அவருடைய மனைவி முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபருக்கு இன்று அல்லது நாளை பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரியவருகிறது.

பரிசோதனை முடிவுகளின் பின்னரேயே அவரைச் சார்ந்திருப்பவர்களை தனிமைப்படுத்தவது தொடர்பில் தீ்ர்மானிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post