யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா! விபரம் வெளியாகியது!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் இரண்டு பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும் வடமாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி மற்றும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே கோரோனா தொற்றுக்குள்ளாகியமை தெரியவந்துள்ளது.

கடந்த நான்கு நாள்களில் ஐவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வீதிச் சீரமைப்பு பணியில் ஈடுபடும் 12 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது;

வவுனியா பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் அறிவுறுத்தலில் கடந்த 21ஆம் திகதி வவுனியா – நெடுங்கேணி வீதிச் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் சிலரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

இதன்போது மூன்று பேருக்கு கோரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பதுளையைச் சேர்ந்த ஒருவர் உள்பட தென்னிலங்கையைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதனால் மூவருடன் வவுனியா – நெடுங்கேணி வீதிச் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட அனைவரிடமும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேலும் 7 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் வல்வெட்டித் துறை, சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த மூவர் அடங்குகின்றனர். ஏனைய நால்வரில் இருவர் மாத்தளையும் ஒருவர் அம்பாந்தோட்டையையும் மற்றையவர் பலாங்கொடையையும் சேர்ந்தவர்கள்.

யாழ்ப்பாணம், கிளிநோச்சியைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்தமையால் அச்சமடையத்தேவையில்லை. எனினும் அவர்கள் கடந்த ஒரு வாரத்தில் வைத்திருந்த தொடர்புகள் ஆராயப்படுகிறது – என்றனர்.

தொடர்புபட்ட செய்தி: 
Previous Post Next Post