பிரான்ஸை ஆட்டம் காண வைத்த கொரோனா உயிரிழப்பு! (10.11.2020)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை அரசாங்க தகவல்திணைக்களம் வெளியிட்டுள்ளது,

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 10 , 2020 செவ்வாய்க்கிழமை
  • 1,220 பேர் மரணம்
  • 22,180 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….

மொத்த இறப்புக்கள் 42,207

மொத்த தொற்றுக்கள் 1,829,659

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,263 (கடந்த 24 மணி நேரத்தில் + 754)

மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 28,944 (கடந்த 24 மணி நேரத்தில் + 466) ஆகும்.

பிரான்சில் தற்போது 31,505 (+380) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4,750 (+60) பேர்தீவிர சிகிச்சையில் உள்ளனர். 473 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். 131,920 (2,185) குணமடைந்து வெளியேறியுள்ளனர், சோதனை நேர்மறை வீதம் 19.6% ஆக குறைந்தது.

பொது சுகாதார பிரான்சின் தரவுகளின்படி, 99மாவட்டங்கள் தற்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியசூழ்நிலையில் உள்ளன.

இன்றைய (10.11.2020)உயிரிழப்புகள் 1220ஐ தொட்டதா ? உண்மை என்ன ?

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பிலான அரசாங்கத்தின் நாளாந்த அறிக்கையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1 220 என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னராக கொரோனாவின் முதல் அலையின் போது ஒரு தடவை 2 ஆயிரத்தும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் அறிவிக்கப்பட்டு அதிர்ச்சியினை சுகாதாரத்துறை ஏற்படுத்தியிருந்தது.

உண்மையில் இப்புள்ளிவிபரங்களின் பின்னால் உள்ள நிலைவரம் என்ன ?

சுகாதாரத்துறையின் நாளாந்த அறிக்கையில் மருத்துவமனை தனியாகவும், மூதாளர் இல்லங்கள், சமூக மையங்கள் தனியாகவும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இவ்விரண்டு கணிப்பீடுகளையும் சேர்த்தும், தனியாகவும் ஊடகங்கள் ஒவ்வொன்றும் வெளியிட்டு வருகின்றன.

குறிப்பான மூதாளர் இல்லங்கள், சமூக மைய உயிரிழப்புக்கள் தொடர்பிலான புள்ளிவிபரங்களை உடனடியாக சுகாதாரத்துறைக்கு கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படுவதுண்டு.

கடந்த மூன்று நாட்களாக உயிரிழப்புகள் தொடர்பிலான கணிப்பீடுகள் கிடைக்காத நிலையில், தனியே மருத்துவமனை உயிரிழப்புக்களை மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன.

இந்நிலையில் இன்று கடந்த மூன்று நாள் உயிரிழப்புக்களையும் சேர்ந்து வெளியிட்ட நிலையிலேயே இன்றைய உயிரிழப்பு 1 220 என வெளிவந்துள்ளது.
Previous Post Next Post