
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இரண்டாம் இணைப்பு:
மண்டைதீவு 01 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசகுமார் (சேக்ஸ்பியர்) சர்வின் (வயது-07) மற்றும் இராசகுமார் (சேக்ஸ்பியர்) நெர்வின் (வயது-05) ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவார்.
அண்மையில் பெய்த மழை நீர் வயல் கேணிக்குள் நிரம்பியிருந்த நிலையிலேயே அதில் தவறி விழுந்து குறித்த சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இரு சிறுவர்களும் தந்தையுடன் வயலுக்குச் சென்ற நிலையில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு:
மண்டைதீவுப் பகுதியில் வயல் கேணி ஒன்றுக்குள் விழுந்த இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த கேணிக்குள் அண்மையில் பெய்த மழை நீர் நிரம்பியிருந்த நிலையில் அதில் விழுந்து குறித்த சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 மற்றும் 5 வயதுடைய சகோதரர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.




