செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பனை மட்டைகள் கொண்டு பக்தர்களை விரட்டிய பொலிஸ்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசங்கார நிகழ்வை தரிசித்து தமது விரதத்தினை நிறைவு செய்வதற்காக இன்று சனிக்கிழமை வந்த பக்தர்களை நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்க வைத்து அசௌகரியங்களிற்கு உட்படுத்தினர் என தமிழர் விடுதலை கூட்டணியின் மூத்த துணைத்தலைவர் ச. அரவிந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நேற்றைய தினம் (20-11-2020) வெள்ளிக்கிழமை சைவ சமயத்தவரின் மிக முக்கிய விரதத்தில் ஒன்றான கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசங்கார நிகழ்வை தரிசித்து தமது விரதத்தினை நிறைவு செய்வதற்காக வந்த பக்தர்களை நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்க வைத்து அசௌகரியங்களிற்கு உட்படுத்தினர்.

அதன் போது, எந்த விதமான சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். அது மாத்திரம் அல்ல இந்த புனித ஆலய வீதிகளில் பொலிஸ் அதிகாரிகள் பாதணிகளோடு தடிகள் மற்றும் பனம் மட்டைகள் கொண்டு பக்தர்களை விரட்டினார்கள். இந்த சம்பவத்தை மிகவும் வன்மையாக நாம் கண்டிக்கின்றோம்.

எதிர்வரும் காலங்களிளாவது ஆலய புனிதத்தினை பேணிப்பாதுகாத்து இந்து சமய புனிதத்தினை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் மாவட்டத்திற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரியையும் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.





Previous Post Next Post