பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று! பரிஸ் நகரபிதாவின் அதிரடி அறிவிப்பு!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பாரிஸ் நகரமுதல்வர் Anne Hidalgo; empoté சேவைகளை வழங்கும் உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் மதுபானம் விற்கும் சில சில்லறைக் கடைகளையும் இரவு 10 மணிக்கு மூட வேண்டும், (குறிப்பிட்டஎண்ணிக்கையிலான இடங்கள்) என (05/11/2020) வியாழக்கிழமை காலை பிரான்ஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“நகரத்தின் அனைத்து இடங்களையும் பொருட்படுத்தாததால் நான் இதை ஊரடங்கு உத்தரவு என்று அழைக்கமாட்டேன்,” என்று அவர் BFMTVயிடம் கூறினார், இது “பிரச்சினைகள் இருக்கின்ற இடங்களை” குறிவைக்கும் ஒரு நடவடிக்கையாகும்,

குறிப்பாக empoté சேவையை வழங்கும் அருந்தகங்கள், மற்றும் உணவகங்களால் மக்கள் கூட்டம் வெளியே கூடிவருகிறது

புதிய விதிகளால் எந்த இடங்களில் மூடப்பட வேண்டும் என்பதை Anne Hidalgo சரியாகக் குறிப்பிடவில்லை,

முக்கியமாக மூடவேண்டிய இடங்கள் empoté சேவைகளை வழங்கும் உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் மதுபானம் விற்கும் சில சில்லறைக் கடைகளையும் என கூறினார்,

காரணம் குறிப்பாக மதுவை வாங்க கூட்டம் அலைமோதுவதாகவும் இதனால் சனநெருக்கடி ஏற்படுகின்றது, இது தொடர்பான பாரிஸ் நகர காவல்துறையின் ஆணை விரைவில் வெளியாகும் என மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post