யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 36 பேருக்குக் கொரோனாத் தொற்று!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணி வெளியிட்டுள்ள நாளாந்த அறிக்கையின் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்று சனிக்கிழமை 760 கோவிட் -19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 397 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 136 பேரும் கண்டி மாவட்டத்தில் 55 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 50 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 4ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்று அலையின் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 120 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் அதிகப்படியாக 14 ஆயிரத்து 107 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post