யாழ்.பருத்தித்துறையில் 4 மாதக் கர்ப்பிணிப் பெண் திடீர் சாவு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பருத்தித்துறை சாரையடியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை கிடைத்ததும் உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட குருதிப்போக்குக் காரணமாக இன்று காலை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் அவர் அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அதனால் அவரது சடலம் பிசிஆர் மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post