கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தில் மூவருக்குக் கொரோனா! 55 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 55 குடும்பங்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரத்தில் பாரவூர்திச் சாரதி ஒருவருக்கும் அவரது குடும்பத்தில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நேற்று மேலும் 55 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“சாரதியின் குடும்பத்துடன் நேரடித் தொடர்புகளை வைத்திருந்தவர்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சாரதியின் குடும்பத்துடன் தொடர்புடைய ஒருவர் சுகயீனமடைந்துள்ளதால் அவரைப் பார்ப்பதற்குச் சென்றவர்களே சுகாதார மருத்துவ அதிகாரியினால் அடையாளப்படுத்தப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 54 குடும்பங்களும் கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரு குடும்பமும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கிளிநொச்சியில் நேற்று மூவரின் பிசிஆர் பரிசோதனையில் முடிவு எடுக்க முடியாத நிலை என்று ஆய்வுகூடத்தால் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களது மாதிரிகள் மீளவும் பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன.
Previous Post Next Post