சுன்னாகம் சந்தை வியாபாரிகள் இருவருக்கு கொரோனாத் தொற்று!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (டிசெ. 17) வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

சுன்னாகம் பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் 110 வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 110 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 2 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 108 பேருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் சந்தை கொரோனா வைரஸ் தொற்றுக் கொத்தணியை அடுத்து சங்கானை பொதுச் சந்தை மற்றும் சுன்னாகம் பொதுச் சந்தை என்பவற்றிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post