13ஆவது திருத்தத்தின் ஊடாக அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு! இலங்கையிடம் மீண்டும் வலியுறுத்தியது இந்தியா!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக வாக்குறுதியளித்தபடி அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வைக் கொண்டுவர இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்தியாவிலிருந்து கோவிட் -19 தடுப்பூசி பெற இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து இந்திய தரப்பு இலங்கைக்கு மருத்துவ உதவிகளை செய்து வருவதை அவர் நினைவு கூர்ந்தார்.

இன்று பிற்பகல் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் நடத்திய கூட்டு ஊடக சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்தார்.

“ஒன்றுபட்ட இலங்கையின் நல்லிணக்கத்திற்கும், சமத்துவம், நீதி, அமைதிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்” என்றும் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

வெளியுறவு அமைச்சர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான மீன்வள பிரச்சினை குறித்தும் விவாதித்தனர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.

அவர் இன்று மாலை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளார்.
Previous Post Next Post