யாழ். பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிப்பு!(வீடியோ)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு இடித்தழிக்கப்படுகிறது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் முற்றம், பொங்குதமிழ் நினைவாலயம் மற்றும் மாவீரர் நினைவுச் சின்னம் ஆகியன உள்ள பகுதியில் மின்குமிழ்கள் அணைகப்பட்டு ஜேசிபி கொண்டு இடித்தழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்பு பகுதியே இந்த இடித்து அழிக்கும் பணியை இரவோடு இரவாக முன்னெடுத்தது.

இதனை உறுதி செய்ய துணைவேந்தரின் ஊடகப் பிரிவிடம் தொடர்புகொண்டும் பதில் கிடைக்கவில்லை.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடம் இடித்தழித்துள்ளது.Previous Post Next Post