யாழ்.போதனா அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நேற்றுமாலை அந்த நோயாளியிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் அவருக்கு மருத்துவ சேவை வழங்கிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இன்று இடம்பெறும் பிசிஆர் பரிசோதையின் பின்பே அவர் கோவிட்-19 நோய் சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

குறித்த பெண் கடந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ விடுதியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் மூச்சுத் திறனலையடுத்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
Previous Post Next Post