பளை - இயக்கச்சி பகுதியில் கோர விபத்து! இரு குழந்தைகள் உயிரிழப்பு!! (வீடியோ)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி, பளை- இத்தாவிலில் டிப்பர், கார் மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தந்தை படுகாயம் அடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்றிரவு (26) இடம்பெற்றது.

சம்பவத்தில் பளை தர்மக்கேணியைச் சேர்ந்த 16 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post