சீன மொழி ஆக்கிரமிப்புக்குள் யாழ்.சாவகச்சேரி! (படங்கள்)

யாழ்.சாவகச்சோியில் சீன அரச நிறுவனமான China State Construction Engineering Corporation சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.

அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதியுள்ளதோடு தனியான பெயர் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.

வடகிழக்கில் தமிழ் மொழி பிரதான மொழி என்று இருக்கும் பட்சத்தில், தமிழும் இல்லை சிங்களமும் இல்லாது தனியே சீனமொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post