பிரான்ஸ் தேர்தலில் களமிறங்கும் தமிழ் மாணவன்! (படங்கள்)


இம்மாதம் 20 மற்றும் 27 ஆகிய திகதிகளில் பிரான்ஸ் நாட்டில் மாவட்ட, பிராந்திய சபைத் தேர்தல்கள் நடை பெறவுள்ளன. இதில் SEINE - SAINT-DENIS மாவட்டத்திற்கான வேட்பாளராக LA COURNEUVE, DUGNY, மற்றும் LE BOURGET நகரங்கள் இணைந்த தொகுதியில் முதல் முறையாக செல்வன் அற்புதராஜா ஜெரலோன் LFI , PCF ஆகிய கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்களினால் தொழிளாளர்களுக்கு எதிரான மசோதாச் சட்டம், கல்வி முறையில் மாற்றம், சமூக நலத்திட்டங்கள் போன்றவற்றுக்கான ஜனநாயக ரீதியான பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஜெரலோன் கலந்து கொண்டு அவர் ஆற்றிய பங்களிப்பு பொதுமக்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தான் வாழும் LA COURNEUVE நகராட்சி மன்றத்தினால் நடாத்தப்படும் பத்திரிகைக்கு இவர் வழங்கிய பேட்டியில் COVID 19ன் பிற்பாடு ஆசிரியர்கள், மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு, உதவித் திட்டங்கள் பற்றிய இவரது கருத்து சகலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கிகரிக்கப்பட்டது. ஜெரலோன் தலைமையில் மாணவர் அமைப்புக்களோடு சேர்ந்து உயர்தர வகுப்பு இறுதியாண்டு பரீட்சை விடயமாக BOBIGNYஇல் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் மற்றும் ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தித் தொகுப்பு பிரான்சில் மிகவும் பிரசித்தமான LE PARISIEN பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய 15ஆவது வயதிலே அரசியலில் இணைந்து கொண்ட ஜெரலோன் பல அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டவர், இவருடைய சமூக அரசியல் செயற்பாடுகள் மாணவர்கள் , பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதினால் இவர் சார்ந்த அரசியல் கட்சி இவரை மாவட்ட சபை வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றார்கள்.

ஆகவே குடியுரிமை பெற்ற தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை இவருக்கு அளிப்பது சாலச்சிறந்தது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post