யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்த இளைஞன் உயிரிழப்பு!

வடமராட்சி கரவெட்டி மத்தொணி பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்தார்.

நேற்று மாலை அப்பகுதி ஆலயம் ஒன்றில் இளைஞர்களுடன் ஆலயத்தின் தொண்டுப்பணியில் ஈடுப்பட்ட பின்னர் இரவு வீட்டுக்கு சென்ற நிலையில் இரவு 12-00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் நெல்லியடி பகுதியில் விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வரும் சுதாகரன் பிரசாந் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இந்நிலையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
Previous Post Next Post