யாழில் கொரோனாத் தொற்று! மேலும் ஒருவர் உயிரிழப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99ஆக உயர்வடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 28 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று மாலை வரை 5 ஆயிரத்து 390 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post