அல்லைப்பிட்டியில் கேரள கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைது! (படங்கள்)

அல்லைப்பிட்டியில் முச்சக்கர வண்டியில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை – அல்லைப்பிட்டியில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 3 பொதிகளில் 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் முச்சக்கர வண்டியும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post