திருமண நிகழ்வுகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!


இன்று இரவு புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளன.

திருமண வைபவங்களுக்கு இதுவரை 150 விருந்தினர்கள் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்ட நிலையில் புதிய வழிகாட்டலின் அடிப்படையில்
50 பேருக்கு மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று முதல் இறுக்கமாக்க கண்காணிக்கப்படும் என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்தியாவசிய ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், தொழிலுக்கு செல்வோரை தவிர வேறு யாரும் மாகாணங்களைக் கடக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post