கழுத்திலிருந்த சங்கிலியைக் கேட்ட மகன்! தர மறுத்த தாய்!! கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூரம்!!! (படங்கள்)


மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குமாரவேலிய கிராமத்தில் மகனொருவர் தனது தாயை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குமாரவேலிய கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பொன்னுத்துரை தவமணி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் தனது மகளுடன் வாழ்ந்துவந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் அவர்களின் வீட்டிற்கு வந்த மகன் தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கேட்டு சண்டை பிடித்துள்ளார்.

எனினும் தாயார் சங்கிலியை கொடுக்க மறுத்த நிலையில் மகனுக்கும், தாய்க்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து மகன் அங்கிருந்த கத்தியால் தாயின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனான 44 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு சென்ற நீதவான் பார்வையிட்டதை தொடர்ந்து சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தீவிர விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post