நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு!


கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அலகுகளையும் பெற்றுக்கொள்ளாத வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் நாடு திரும்புகையில் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பிசிஆர் பரிசோதனையின் போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், சிகிச்சைக்காக அவர்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகளுக்கான தொடர் சுகாதார வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டு இந்த அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் பிரிவின் சமூக மருத்துவ வல்லுநர் தில்ஹானி சமரசேகர தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வீட்டிலேயே சிகிச்சை பெறுவதற்கு வசதியில்லாத இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் விரும்பினால் அரச இடைநிலை சிகிச்சை நிலையங்களுக்கோ அல்லது அரச அங்கீகாரம் பெற்ற சிகிச்சை நிலையங்களுக்கோ செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவ வல்லுநர் தில்ஹானி சமரசேகர கூறினார்.
Previous Post Next Post