கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து மரணம்!

கிளிநொச்சி ஏ9 வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாகநேற்றிரவு 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இல. 403, திருநகர் தெற்கைச் சேர்ந்த சின்னத்துரை ரஞ்சன் (வயது 60) என்பவரே மரணமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மரணமடைந்தவரின் மனைவி இதற்கு முன்னர் மூன்று தடவை மாரடைப்பு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Previous Post Next Post