கிளிநொச்சியில் செகுசு பஸ் - கன்டர் வாகனம் விபத்து! (படங்கள்)

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் செகுசு பேருந்து ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த கன்டருன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

கன்டர் வாகனம் வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு சென்ற நிலையில் இயக்கச்சி பாற்பண்ணை நோக்கித் திரும்ப முற்பட்ட போது பின்னால் வந்த குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து கன்டருடன் மோதியதில் கன்டர் வாகனம் வீதியில் தடம் புரண்டுள்ளது.

சம்பவத்தில் குளிரூட்டப்பட்ட பேருந்தும், கன்டர் வாகனமும் கடும் சேதங்களுக்கு உள்ளான போதும் தெய்வாதீனமாக உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிய வருகின்றது.
Previous Post Next Post