யாழில் விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!! (படங்கள்)

சிறுப்பிட்டி நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களது பிள்ளை படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்க்பட்டுள்ளனர்.

இன்று மாலை 5 மணியளவில் காரும் மோட்டார் சைக்கிலும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

8 வயதுச் சிறுவன் கால் முறிந்த நிலையில் 48 வயதுடைய தந்தையும் 42 வயதுடைய தாயும் படுகாயமடைந்துள்ளனர்.

கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த மூவரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தை நேரில் கண்டவர் வாதிட்ட நிலையில் கார் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Previous Post Next Post