சுவிஸர்லாந்தின் முன்னணி வங்கி ஈடாட்டம் கண்டது!

சுவிஸர்லாந்தின் முன்னணி வங்கியான Credit Suisse சற்று ஈடாட்டம் கண்டுள்ளதாக பங்குச் சந்தை நிலவரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த வங்கியில் 2021 ஆம் ஆண்டில் இருந்த பல முதலீட்டாளர்கள் சுமார் 11 பில்லியன் சுவிஸ் பிராங் தொகையினை மீளப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பங்குச் சந்தையில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த வங்கிக்கு முதலீட்டாளர்களுக்குப் பணம் கொடுக்கின்ற வலு இருப்பதென்பதைச் சாட்சிப்படுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வங்கி தற்போது சவுதி வங்கியை பங்காளராக இணைத்துக் கொண்டு தங்களுடைய நிதி இருப்பினை உறுதி செய்திருக்கின்றார்கள்.

இருந்தாலும் குறித்த வங்கி பங்குச் சந்தையில் தன்னுடைய பழைய நிலையை அடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வங்கியின் ஆண்டுச் செலவினை முகாமைச் செய்து, சரி பாதியாகக் குறைப்பதற்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் பொறுப்பளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு செலவுகள் சரி பாதியாகக் குறைக்கப்படும் பட்சத்தில் பல ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வங்கி காப்பாற்றப்படுமா? தொடர்ந்தும் நிலையான, திடமான வங்கியாக மாற்றமடையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை உலகில் பெரும் நிதி வல்லமை கொண்ட வங்கியான Credit Suisse காப்பாற்றப்படும் என்றே நம்பப்படுகின்றது.
Previous Post Next Post