மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி கோவில் வீதி புனரமைப்பு! (படங்கள்)

மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி ஆலயத்தின் வீதி கடந்த 3 மாதங்களுக்கு முன் புனரமைப்புச் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் முழுமையாக இவ் வீதி புனரமைக்கப்படாது இடைநடுவில் விடப்பட்டிருப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் 2.0 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் கம்பெரலிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் குறித்து அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Previous Post Next Post