முஸ்லிம் கடையில் தமிழ் யுவதி மீது கடும் தாக்குதல்! முற்றுகையிட்ட பொதுமக்கள்!! (வீடியோ)

வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் தமிழ் பெண், அக் கடையின் உரிமையாளரின் மகனால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் அப் பகுதியில் பெருமளவு இளைஞர்கள் ஒன்கூடியதால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் கண்ணாடிப் பொருள் ஒன்றை உடைத்ததாக தெரிவித்து உரிமையாளரின் மகன் பெண்ணை நிலத்தில் தள்ளி விட்டு சரமாரியாகத் தாக்கியதாக சம்பவத்தில் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதனால் அப் பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டுள்ளனர். இதையடுத்து அப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் தாக்கியதாகத் தெரிவிக்கப்படும் நபரையும் பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.Previous Post Next Post