காரைநகர் - பொன்னாலை வீதியில் கடலுக்குள் பாய்ந்தது இ.போ.ச. பேருந்து! (படங்கள்)

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியில் கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துனர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் – யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான ND-9921 என்ற இலக்கப் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.


Previous Post Next Post