இன்று இரவு 7.30 மணியளவில் மறவன்புலவில் உள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்தோர், பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி பிரதேச சபையின் மறவன்புலவு வட்டார உறுப்பினர் அரியகுட்டி நிமலறோகன் என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர் சிறு காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வாள்வெட்டுக்கு இலக்கான உறுப்பினகா், மறவன்புலவில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு சாவகச்சேரி பிரதேச சபையில் இன்று இடம்பெற்ற சிறப்பு அமர்வில் மறவன்புலவில் இடம்பெற்றுவரும் கசிப்பு உற்பத்தி தொடர்பில் சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.