கொரோனாத் தொற்று! மேலும் ஒருவர் குணமடைந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தார்!!

கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்து இன்று யாழ்ப்பாத்திலுள்ள வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டவர்கள் வெலிக்கந்தை வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்கு அனுப்பபட்டிருந்தனர்.

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் 17 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் முதற்கட்டமாக 4 பேர் குணமடைந்து யாழிலுள்ள தமது வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வெலிக்கந்தையில் சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் குணமடைந்து இன்று நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டு அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 17 பேர் தொற்று அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் கடந்தவாரம் 4 பேர் சிகிச்சை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றார். ஆகையினால் 17 நோயாளர்களில் தற்பொது 5 பேர் குணமடைந்து வீடகளிற்கு அனுப்பி வைக்கப்படுகின்ற நிலையில் ஏனையவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post