இன்றிரவு அமுலாகும் ஊடரங்குச் சட்டம் நாளை முழுவதும் நடைமுறையில்..!

நாடு முழுவதும் இன்று (16) இரவு 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுலாகிறது. கடந்த 11ஆம் திகதி முதல் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கையை அரசு முன்னெடுத்தது.

கொரோனா இடர்வலயமான கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பகுதியளவில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்தன.

இந்த பகுதிகளில் இரவு 8 மணிக்கு ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு வந்தது. ஊரடங்கு அமுலில் இருந்த கொழும்பு, கம்பஹாவிலும் கட்டுப்பாடுகளுடன் அரசஇ தனியார் நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்திருந்தன.

இந்த நிலையில் நாளை (17) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் மக்களின் தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்த, இன்று (16) இரவு 8 மணிக்கு வழக்கம் போல அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு, நாளை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட மாட்டாது.  நாளை இலங்கை முழுவதும் ஊரடங்கு அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை மறுநாள் (18) அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும்.
Previous Post Next Post