பொங்கி வழியும் ஆலயக் கிணறு! படையெடுக்கும் மக்கள்!! பாதுகாப்பு வழங்கும் இராணுவம்!! (வீடியோ)

கோயில் கிணற்றில் அரையடி இருந்த தண்ணீர் அதிகாலை நிரம்பி வழிந்த அதிசய சம்பமொன்று களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலத்தில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்த தகவல் பரவியதையடுத்து, பெருந்திரளான மக்கள் அங்கு குவிந்தனர். அங்கு இராணுவம் மற்றும் பொலிசாரின் பாதுகப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

“நான் நேற்று கிணற்றை பார்வையிடும் போது அரையடி அளவிலையே தண்ணீர் கிணற்றில் இருந்தது. ஆனால் இன்று அதிகாலை பூசைக்கு வருகை தந்து கிணற்றினை பார்வையிட்டபோது கிணறு நிரம்பி நீர்வழிந்திருந்ததையிட்டு அதிர்ச்சியடைந்தேன். இதனை உடனடியாக ஆலய நிருவாகத்திடம் அறிவித்தேன். இது இறைவனின் செயலாகவே நான் பார்கின்றேன்“ என ஆலய பிரதம குரு மு.அங்குச சர்மா அவர்கள் தெரிவித்தார்.Previous Post Next Post