மீண்டும் முடக்கப்படும் ஆபத்தில் பிரான்ஸ்! மக்களின் செயற்பாடுகளால் அதிர்ச்சி!! (வீடியோ)

எட்டு வார கால பொதுமுடக்கத்தின் பின் 'கொரோனாவுடன் வாழப்பழக்கும் அரசாங்கத்தின் செயன்முறையில் முதன்நாள் காலை சரியான முறையில் மக்களால் பேணப்பட்டுள்ளதாக காலை ஊடகச் செவ்விகளில் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

5% வீதமானவர்களைத் தவிர பிறர் சுவாசக்கவசத்துடன் தலைநகர் பரிசில் பயணங்களை மேற்கொண்டிருந்ததனை தாம் அவதானித்திருந்ததாக போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

13ம் இலக்க மெட்ரோவில் மட்டும் சனநெரிசல் காணப்பட்டதாதகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  இதேபோன்று 13ம் இலக்க மெட்ரோவில் ஏற்பட்டுள்ள சனநெரிசலை சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத்துறை அமைச்சரும், மீண்டும் வைரஸ் பரவல் ஏற்படுமாயின் மீண்டுமொரு பொதுமுடக்கத் தவிக்க முடியாததாக அமைந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

தொடருந்து நிலைய வாயில்களில் பயணங்களுக்கான காரணகாரியங்களுக்கான அனுமதிப்பத்திரம் சோதனை செய்யப்பட்டதோடு, சுவாசக்கவசங்களும் விநியோகிக்கப்பட்டிருந்தன.

மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ள தொடருந்து நிலையங்களில் நடமாடும் கைகழுவி மருந்துகள் மக்களை நோக்கி வழங்கப்பட்டுள்ளன.
இது இவ்வாறிருக்க, தலைநகர் பரிசின்Canal Saintv Martin ன் ஓரத்தில் பானங்களுடன் சூரியக்குளியலை எடுத்தவர்களின் நிலை சமூக இடைவெளி, சுவாசக்கவங்கள் தொடர்பிலான கேள்வியினை சமூகவலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது. 

கொரோரான வைரஸ் அதிகம் பாதித்த பிராந்திய இல்-டு-பிரான்ஸ் இருப்பதோடு, இன்னமும் வைரஸ் உயிர்புடன் உலாவும் சிவப்பு பிராந்தியாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக்காட்சி மீண்டுமொரு கொரோனா அலைக்கான ஏற்பாடா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நெரிசலாக கூடுகின்ற இடமாக உணவகங்களும், அருந்தகங்களும் உள்ளதென்ற நிலையில், அவைகள் தொடர்சியாக அரசாங்கத்தினால் மூடப்பட்டுள்ளது.  இருந்தும் அவ்விடங்களில் கிடைக்கின்ற அனுபவத்தினை வெளியில் கண்டுள்ளனர்.

நெரிசலை தவிக்கும் பொருட்டு சமூக இடைவெளி, சுவாசக்கவசம் பாவனை என தொடர்சியாக விழிப்பு பிராசாரங்களை செய்து வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனைகளில் 507 பேர் குணமடைந்துள்ளதோடு, புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 523 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதேவேளை இன்னமும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post