பண்டத்தரிப்பு பற்றிமா அன்னை ஆலயத்தின் திருநாள் திருப்பலி நேரலையாக ஒளிபரப்பு!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா அன்னை ஆலயத்தின் திருநாள் திருப்பலி நேரலையாக ஒளிபரப்பப்படும் என யாழ்.ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த ஆலயத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு திருப்பலியை யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக் கொடுக்கவுள்ளார்.

இத் திருப்பலி வழமையான தொலைக்காட்சிகளிலும் இணையத்தளங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு இறை மக்கள் எவரும் இத் திருப்பலியில் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாது என்றும் யாழ்.மறை மாவட்ட ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post